Home இலங்கை மத்திய கிழக்கில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள் : அரசு மில்லியன் டொலர் ஒதுக்கீடு

மத்திய கிழக்கில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள் : அரசு மில்லியன் டொலர் ஒதுக்கீடு

0

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அங்குள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க (America) டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை மீண்டும் தீவுக்கு அழைத்து வரும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மத்திய கிழக்கில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர்கள்

இதனடிப்படையில், சுமார் 12,000 இலங்கை தொழிலாளர்கள் இஸ்ரேலிலும் (Israel), 15,000 பேர் ஜோர்தானிலும் (Jordan), 7,500 பேர் லெபனானிலும் (Lebanon) மற்றும் சுமார் 500 பேர் எகிப்திலும் (Egypt) மோதல் வலயங்களில் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) போரில் ஹிஸ்புல்லா (Hezbollah) மற்றும் ஈரானின் (Iran) தலையீடு காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளதாக மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version