இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை
முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் மூலம் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு இந்த குழுவின் தகவல்களை வழங்கியுள்ளது.
சட்ட நடைமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம். மியன்மார் அரசுடன் கலந்துரையாடல் இடம்பெறும் இந்நிலையில் நாடு கடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடியும் வரை அகதிகள் தடுத்து வைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
டிசம்பர் 19ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கி 115 ரோஹிங்கியாக்களை ஏற்றிக்கொண்டு பலநாள் படகு ஒன்று மிதந்த வந்த நிலையில் கடற்படை அதனை கைது செய்தது.
படகில் 103 புகலிடக் கோரிக்கையாளர்களும் 12 பணியாளர்களும் இருந்தனர்.