தமிழரசுக் கட்சியில் சிறீதரனின் (S. Shritharan) பதவி பறிக்கப்பட்டால் அவர் தேசிய மக்கள் சக்தியில் இணைவதில் எவ்வித தவறும் கிடையாது என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் அவருக்கு எதிராக ஜனநாயக விரோத செயலை செய்கின்ற போது அதற்கு எதிராக அவர் தனிமனித வினை ஆற்றுவார் அது தனி மனித விருப்பு.
அத்தோடு, தேசிய மக்கள் சக்தியில் அவர் இணைவாராக இருந்தால் அவரது நாடாளுமன்ற பதவி தொடர்ந்து தக்கவைக்கப்படும்.
அடுத்து நடைபெறவுள்ள தேர்தலிலும் சிறிநேசனுக்கும் மற்றும் சிறீதரனுக்கும் மக்கள் ஆதரவு கட்டாயம் பெருகும் ஆகையால் தேசிய மக்கள் சக்திக்கும் அவர்கள் வருவதில் பாரிய விருப்பமும் மற்றும் எதிர்ப்பாப்பும் உள்ளது.
கட்சியை விட்டு இவர்கள் துரத்தப்படுவார்களாக இருந்தால் இவர்களுக்கான ஆதரவு தேசிய மக்கள் சக்தியில் கட்டாயம் காணப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக விரிவான விவரங்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/PX_FYdq9t70?start=10