Home சினிமா தளபதி 69 படம் இந்த தெலுங்கு படத்தின் ரீமேக் தானா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தளபதி 69 படம் இந்த தெலுங்கு படத்தின் ரீமேக் தானா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

0

தளபதி 69

நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இப்படம் ஆரம்பம் ஆகும்போதே, இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவத் கேசரி படத்தின் ரீமேக் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. சில விஷயங்கள் அப்படத்திலிருந்து போல் இருக்கும் என்றும், ஆனால் கதை முழுமையாக வேறு என்றும் கூறினார்கள்.

தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிக் பாஸ் ராணவ்.. வைரலாகும் வீடியோ

தெலுங்கு படத்தின் ரீமேக் தானா

இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், பகவத் கேசரி படத்தில் வந்ததோ போல், ஒரு காட்சியை தளபதி 69 படத்தில் வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

பகவத் கேசரி படத்தில், ஸ்ரீலீலாவை ரவுடிகள் கடத்தி கொண்டு போக, அங்கு லாரியில் மாஸாக என்ட்ரி கொடுப்பார் பாலகிருஷ்ணா. அந்த காட்சியை சமீபத்தில் தளபதி 69ல் செட் அமைத்து எடுத்ததாக கூறப்படுகிறது.

மமிதா பைஜூவை ரவுடிகள் கடத்திக்கொண்டு போக, விஜய் மாஸாக பைக்கில் என்ட்ரி கொடுத்து காப்பாற்றுவது போல் இந்த காட்சியை எடுத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆகையால் இது பகவத் கேசரி படத்தின் ரீமேக் என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version