Home இலங்கை சமூகம் தொழில்துறையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சஜித்

தொழில்துறையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சஜித்

0

வீழ்ச்சி அடைந்துள்ள தொழில்துறையாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்காதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை நிலையியற் கட்டளை சட்டம் 27 (2) கீழ் நாடாளுமன்றத்தில் இன்று (21) கேள்வி எழுப்பிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராட்டே சட்டமூலத்தினால் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதிர்க்கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பாராட்டே சட்டமூலம் கைவிடப்பட்டாலும், அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடருமா என தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கொள்கை 

அத்தோடு, இந்தத் தொழிற்துறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களில் எந்த அளவிலான சொத்துக்கள் கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதேபோன்று வங்கிகளின் ஊடாக பிரதான கடன்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான விதிகள் சட்டமூலத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்க முன்னெடுக்கும் நீண்ட மற்றும் குறுகிய கால நடவடிக்கை என்ன என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்பில் தேசிய கொள்கை திட்டம் ஒன்று தயாரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா ?

நடுத்தர உற்பத்தியாளர்கள்

இந்த நாட்டில் உள்ள தொழில் முனைவர்கள் அல்லது புத்தாக்க துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள பங்களிப்புக்கு குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த நான்கு வருட காலமாக பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பாராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்தினாலும், அந்தக் காலத்தில் அந்த செலவை ஈடு செய்கின்ற வகையில் அவர்களுக்கான மூலதனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

கிரிப் பட்டியலில் உள்ள தொழில்துறையாளர்களின் கடனை புதிதாக மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

வீழ்ச்சி அடைந்துள்ள தொழில்துறையாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்காதது ஏன் அத்தோடு அவர்களுக்கான மூலதனத்தையும் ஈடு செய்ய முடியுமான செலவையும் வழங்காதது ஏன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version