ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று (21) விலகிய தலதா அத்துகோரளவின்(Thalatha Athukorala) இடத்திற்கு கரு பரணவிதான (Karu Paranavithana)நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலதா அத்துகோரளவிற்குப் பின்னர் விருப்பு வாக்குபட்டியலில் ஐந்தாம் இடத்தில் கரு பரணவிதான உள்ளார்.
பெற்ற வாக்குகள்
அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 36,787 ஆகும்.
கரு பரணவிதான தற்போது பாட்டாலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.