Home முக்கியச் செய்திகள் பிணவறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம்

பிணவறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம்

0

அரச இலச்சினையுடன் கூடிய அரச வாகனமொன்று கொழும்பு (Colombo) – ஹோமாகம (Homagama) ஆதார வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வாகனம் கடந்த வெள்ளிக்கிழமை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிணவறைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனம்

இந்த வாகனம் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்து வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள பிணவறைக்கு அருகில் நிறுத்திவிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணவறைக்கு அருகே பல நாட்களாக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், உரிமையாளர் இல்லை என்ற தகவல் தெரியவந்ததையடுத்து வெளிநபர் மூலம் வாகனத்தினை வைத்தியசாலை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு, இது குறித்து நிர்வாகத்துக்குத் தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் வாகனத்தின் புகைப்படங்களுடன் சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

NO COMMENTS

Exit mobile version