Home இலங்கை பொருளாதாரம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கலால் வரி : வர்த்தமானி மூலம் அறிவித்த அரசாங்கம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கலால் வரி : வர்த்தமானி மூலம் அறிவித்த அரசாங்கம்

0

ஐந்து வருட இடைநிறுத்தத்திற்குப் பின்னர் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் கலால் வரி சதவீதத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கலால் வரி சதவீதங்களை, வர்த்தமானியின் மூலம், நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

மோட்டார் சக்தியின் அடிப்படை

அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாத பழைய வாகனங்களுக்கு 200வீதம் மற்றும் 300வீத கலால் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

சில வகை வாகனங்கள் அவற்றின் இயந்திர சிலிண்டர் திறன் மற்றும் கிலோவோட்களில் அளவிடப்படும் மோட்டார் சக்தியின் அடிப்படையில் கலால் வரிகளுக்கு உட்பட்டவை என்று அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version