Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையே தமிழினத்துக்கு பலம் என சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையே தமிழினத்துக்கு பலம் என சித்தார்த்தன் தெரிவிப்பு

0

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவ்வாறு ஒற்றுமைப்படுவதே தமிழினத்துக்குப் பெரும் பலமாக இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தர்மலிங்கம் சித்தார்த்தன்(
Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ஒற்றுமையின் ஊடாக ஏற்படுகின்ற பலத்தைக் கொண்டு தமிழ் மக்களுடைய தேசிய இனப்
பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க
வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை

அதற்கு நாங்கள் எல்லோரும் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும்.

இன்றிருக்கின்ற
நிலைமையில் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

ஏனெனில் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கின்ற எமது வடக்கு, கிழக்கு மக்கள்
கடந்த தேர்தலில் அதற்கு மாறான பயணத்தில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தைத் தவிர்த்துவிட்டு வடக்கை எடுத்துப் பார்த்தால்
அதிலும் யாழ்ப்பாணம் மிக மோசமான முடிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலைமைகள் தொடர்வது தமிழினத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆகையினால் எங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை
ஏற்படுத்துவதன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தலாம்.

அவ்வாறான ஒற்றுமையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆகையினால் அத்தகைய
ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் மக்களையும் இணைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்தைப்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version