டெஸ்லா(Tesla) நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின்(Elon Musk) ஸ்டார் லிங்க் இணையசேவைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு Starlink நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
ஸ்டார் லிங்க் சேவை
மேலும், முறையான பொது கலந்தாய்வுக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பொது கலந்தாய்வு விவரங்கள் நாளை வெளியிடப்படும் என்று அதிபர்- ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஸ்டார்லிங்க்(Star Link) செயற்கை கோள் இணைய வசதி தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
பதவி இழப்பாரா மோடி…! பா.ஜ.க RSS இடையில் உச்சக்கட்ட முறுகல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |