Home இலங்கை அரசியல் ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அரசால் பிரகடனம்- வெளியானது வர்த்தமானி

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அரசால் பிரகடனம்- வெளியானது வர்த்தமானி

0

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது
தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியானது வர்த்தமானி

ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையைப் புனித
யாத்திரையாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின்
வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவின் பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதையடுத்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version