Home இலங்கை அரசியல் அநுர அரசுக்கு தடையாகும் முக்கிய அரச அதிகாரிகளின் நகர்வுகள்

அநுர அரசுக்கு தடையாகும் முக்கிய அரச அதிகாரிகளின் நகர்வுகள்

0

இலங்கை அரசியல் வரலாற்றில் 76 ஆண்டு காலமாக இரு பாரம்பரிய கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன.

இதனால். ஒவ்வொரு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இருந்தவர்கள் இந்த கட்சிகளை சேர்ந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியினரின் கொள்கைகளை திடீரென ஏற்றுக் கொள்வதில் முக்கிய அரச அதிகாரிகள் பலர் சிக்கலான தன்மையில் உள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் குறித்த கொள்கைகளுக்கான முடிவுகளை எடுப்பதில் தாமதப்படுத்தலாம்.

எனவே அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காண்பதில் சிக்கல் தன்மை உள்ளது.

குறிப்பாக, நவீன முறைமைக்கு இலங்கை மாற முற்படும் போது அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் அது பல பொருட்களின் பற்றாக்குறைக்கு நாட்டை இட்டுச் செல்லும் என்று கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் ஆராய்கையில்….

NO COMMENTS

Exit mobile version