நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடுப்பனவை செலுத்தும் போது நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்தினால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சுமார் 1200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் குழுவொன்று அண்மையில் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்து இந்தக் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு இவ்வருடம் சுற்றுலாத்துறையின் மூலம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.