Home இலங்கை சமூகம் தகுதியான நபர்களுக்கே அரசாங்க கொடுப்பனவு கிடைக்கவேண்டும்!யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

தகுதியான நபர்களுக்கே அரசாங்க கொடுப்பனவு கிடைக்கவேண்டும்!யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

0

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு
கிடைப்பதனை உறுதி செய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் இன்றைய தினம் (11) கருத்து தெரிவித்த  போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு கிடைக்காமல்
இருப்பதும், அதே வேளையிலே, தகுதியற்ற ஒருவருக்கு கிடைப்பதும் சமூகத்திலே
அல்லது அந்த பிரதேசத்திலே பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அனர்த்த நிவாரண சேவை

அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தின்
சுற்றறிக்கைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள்
கிடைப்பதற்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் அற்ற வகையில் கிராம மட்ட
உத்தியோகத்தர்கள், நிவாரண மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகளை முன்னெடுக்க
வேண்டும்.

பிரதேசத்தில் பல்வேறுபட்ட தாழ் நிலப்பரப்புகள் உள்ளன.பிரதேசத்தினுடைய பல பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கு உட்படக்கூடிய அல்லது வெள்ள
ஆபத்துக்குரிய பிரதேசங்களாக இருக்கின்றன என்பதால், அவ் மக்களுக்குரிய
கொடுப்பனவுகளை உரிய முறையிலே பெற்றுக்கொடுப்பதற்கு – கிராம மட்ட
உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்தல்கள் சரியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version