Home இலங்கை அரசியல் திருகோணமலை மீண்டும் சாம்பலாவதை அனுமதிக்க மாட்டோம் – ஆளும் தரப்பு உறுதி

திருகோணமலை மீண்டும் சாம்பலாவதை அனுமதிக்க மாட்டோம் – ஆளும் தரப்பு உறுதி

0

சதிகளின் தீப்பிழம்புகளால் திருகோணமலை மீண்டும் சாம்பலாவதை
நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநுால் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ்,
இதுபோன்ற குறுகிய சதிகளின் தீப்பிழம்புகளால் திருகோணமலை மீண்டும் சாம்பலாவதை
நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இனவெறி அரசியல்வாதிகள்

மோதல் முயற்சியைத் தடுக்கத் தலையிட்ட திருகோணமலை மாவட்ட பௌத்த மக்களுக்கும்
திருகோணமலையின் ஒற்றுமையை உடைக்க நடந்த சதியை உணர்ந்து, அதற்கு எதிராகத்
தலையிட்ட அனைத்து சிங்கள மற்றும் தமிழ் சகோதரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை சமூகங்களுக்கு இடையேயான மோதலாக மாற்ற முயன்ற இனவெறி
அரசியல்வாதிகளின் தூண்டுதலுக்கு அடிபணியாமல் மக்கள் செயற்பட்டதாகவும் அவர்
பாராட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version