விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது மீனா ரோலில் நடித்து வருபவர் ஹேமா. அவர் தற்போது படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் மேடையில் பேசிய ஹேமா கொஞ்சம் ஆவேசமாக ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.
பயமா இருக்கு
சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் நடிகை கௌரி கிஷன் எடை பற்றி கேட்டது சர்ச்சை ஆனது அதுபற்றி தான் ஹேமா பேசி இருக்கிறார்.
“என்னை மேடையில் பேச சொன்னபோதே பயமாக இருந்தது. ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்டுவிடுவார்களோ. என்ன செய்வது என யோசித்தேன்.”
“அதனால் படம் சம்மந்தமாக கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்கிறேன்” என ஹேமா ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
