Home இலங்கை அரசியல் அமைச்சரவை மாற்றத்திற்கான காரணம்.. அம்பலப்படுத்தும் மொட்டுக் கட்சி!

அமைச்சரவை மாற்றத்திற்கான காரணம்.. அம்பலப்படுத்தும் மொட்டுக் கட்சி!

0

அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளதாக மொட்டுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எந்தவொரு அரசாங்கத்தினதும் முதலாவது அமைச்சரவை மாற்றம் என்பது ஆளுங்கட்சிக்குள் நிலவும் உள் முரண்பாடுகளின் வெளிப்பாடாகும்.

முரண்பாடுகள் 

அவ்வாறான முரண்பாடுகள் காரணமாகவே சந்திரிக்கா அரசாங்கத்தில் தொழில் அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ச, முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது கடற்றொழில் அமைச்சராக மாற்றப்பட்டார்.

அதேபோல அரசாங்கம் என்னதான் மறுத்தாலும் துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் காரணமாகவே பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து அமைச்சுப் பொறுப்பொன்று பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின் முழுப்பொறுப்பையும் பிமலின் தலையில் சுமத்தி விட்டு ஜனாதிபதி தன்னையும் ஏனையவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முனைகின்றார்.

ஆனால், உண்மையில் இந்தச் சம்பவத்தில் பிமல் ரத்நாயக்க மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பொறுப்புக் கூறவேண்டியவர்களேயாகும். பிமலின் தலையில் பொறுப்பைச் சுமத்திவிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version