Home முக்கியச் செய்திகள் விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் : திடீரென நோய்வாய்ப்பட்ட குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் : திடீரென நோய்வாய்ப்பட்ட குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி

0

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரான ‘புவக்தண்டாவே சன’வுடன் உணவு உட்கொண்டதாக விமல் வீரவன்ச கூறியது தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கடந்த 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அன்றையதினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார். இதன்போது விமல் வீரவன்சவிடம் முறையாக வாக்குமூலம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் அழைப்பாணை

இதனையடுத்து தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, நாளை (12) காலை மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை அழைத்துள்ளது.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரான ‘புவக்தண்டாவே சன’வுடன் உணவு உட்கொண்டதாக வீரவன்ச கூறியது தொடர்பாக வே இந்த அழைப்பாணைமீண்டும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version