Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி விதிப்பு

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி விதிப்பு

0

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரி விதிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய டிஜிட்டல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த முதலாம் திகதி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டிருந்தது.

டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி  

அதற்கமைய இலங்கையில் நபர் ஒருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டும்.

கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் வற் வரிக்கு பதிவு செய்வது கட்டாயமாகும்.

சமூக ஊடகங்கள், இணையத்தளம் ஊடான பொருட்கள் கொள்வனவு உட்பட பல்வேறு சேவைகளுக்கு வற் வரி விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version