Home இலங்கை அரசியல் அநுர தரப்பினருக்கு சவால் விடுத்த கோவிந்தன் கருணாகரம்

அநுர தரப்பினருக்கு சவால் விடுத்த கோவிந்தன் கருணாகரம்

0

இந்த நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி, பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் (02.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது வரையில் அனைவரும் சமம் என்று கூறுபவர்கள் வடக்கு கிழக்கைச் சார்ந்த
தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ அவர்களது அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.

சவால் 

தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பிக்கு நான் ஒரு சவால் விடுகின்றேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம் என்று கூறும் நீங்கள் இந்த
நாட்டில் பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமயை ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள்.

உங்களால் இயலுமென்றால் முதலில்
அதைச் செய்து காட்டுங்கள். அதன் பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள்
என்று கூறுங்கள்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version