ராஷ்மிகா மந்தனா
இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 படம் வெளிவரவுள்ளது.
இதை தொடர்ந்து தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
காரணத்தை பாருங்க
இவர் நடிப்பில் டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் புஷ்பா 2 படம் வெளியாகிறது. இந்நிலையில், தனக்கு டிசம்பர் மாதம் மிகவும் ஸ்பெஷல் என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவி ரசிகர் செய்த உணர்ச்சிபூர்வ செயல்.. வைரலாகும் புகைப்படம்
அதற்கு முக்கிய காரணம் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. அது போன்று இவர் நடித்த புஷ்பா முதல் பாகமும் டிசம்பர் மாதம் தான் வெளியானது.
அதை தொடர்ந்து, ராஷ்மிகா நடித்த அனிமல் படமும் டிசம்பர் மாதம் தான் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஸ்பெஷல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.