வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பற்றபடவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சி சார்பில் நேற்று புதன்கிழமை (09.10.2024) வேட்பு மனுதாக்கல் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களது
பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய ஏனைய சமூகங்களினதும் பெரும்பான்மை
இனத்தவர்களதும் தூண்டுதலில் பல சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம்
இந்நிலையில், தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள், தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற
வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வடக்கு கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆகவே, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒன்றாக ஒற்றுமையாக காப்பாற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.