2024 ஆம் ஆண்டு செப்டம்பரில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்க சிறிலங்காவின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது வெற்றி, கடந்த கால அரசியல் குடும்பங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, 2024 நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் NPP 225 இடங்களில் 159 இடங்களை வென்று பெரும்பான்மையைப் பெற்றது . இந்த வெற்றியால், அரசாங்கம் முக்கியமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது.
ஆனாலும் அண்மைய நாட்களாக NPP அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதை காணமுடிகிறது.
குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்து எனபது அரசியல் பரப்பில் அதிகமாக பேசப்பட்டது.
கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரவினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டு சரி என்றால் கடந்த கால அரசாங்கத்தை போலவே தற்போதைய அரசாங்கமும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றது என்று தான் அர்த்தம் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை மற்றும் உலக நடப்புகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு.
https://www.youtube.com/embed/ZC_ZOUINPSY
