Home இலங்கை அரசியல் முல்லைத்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

முல்லைத்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

0

முல்லைத்தீவு(mullaitivu) மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க(bimal rathnayake). 

இதன்படி முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஓகஸ்ட் மாதம் நிர்மாணப் பணி

நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரி (டிசைன்) திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுப செய்தியை வெளியிடுகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளதுஎனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.   

NO COMMENTS

Exit mobile version