Home இலங்கை கல்வி சர்ச்சைக்குள்ளான புலமைப் பரிசில் பரீட்சை! ஜனாதிபதி அநுரவின் புதிய உத்தரவு

சர்ச்சைக்குள்ளான புலமைப் பரிசில் பரீட்சை! ஜனாதிபதி அநுரவின் புதிய உத்தரவு

0

நடந்து முடிந்துள்ள 2024ஆம் கல்வியாண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள  வினாக்கள் 

புலமைப் பரிசில் பரீட்சையில் உள்ளடக்கப்பட்ட வினாக்களில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்த விவகாரம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு இடர் ஏற்படுத்தாத வகையில் குறித்த மூன்று வினாக்களுக்குமான புள்ளிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்  மேற்கொண்டிருந்தது.

எனினும், குறித்த விவகாரம் தொடர்பில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், குறித்த மூன்று வினாக்களுக்கும் முழுமையான புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நேற்றையதினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version