Home சினிமா ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி… ரசிகர்கள் ஷாக்

ஏற்கெனவே 4 சீரியல்கள் இப்போது 5வது சீரியலையும் முடிக்கப்போகும் சன் டிவி… ரசிகர்கள் ஷாக்

0

சன் டிவி

சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் தங்களது தொடரை ஒளிபரப்ப வேண்டும் என போட்டிபோட்டு நிறைய தயாரிப்பு நிறுவனம் புத்தம்புது சீரியல்களை தயாரிக்கிறார்கள்.

புதிய தொடர்கள் வர வர டிஆர்பியில் குறையும் தொடர்களை சன் தொலைக்காட்சி முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். அப்படி இனியா, மிஸ்டர் மனைவி, மலர், சுந்தரி போன்ற தொடர்கள் அடுத்தடுத்து முடிவதாக கூறப்படுகிறது.

இன்னொரு தொடர்

ஏற்கெனவே தொடர்ந்து 4 சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ள நிலையில் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாமா மனசிலாயோ மற்றும் நாங்க ரெடி நீங்க ரெடியா புத்தம் புதிய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் ஞாயிறுகழில் ஒளிபரப்பாகி வந்த அனாமிகா தொடரை முடிவுக்கு கொண்டு வருவது அல்லது நேரம் மாற்றம் செய்யப்படுவது போன்ற ஆலோசனையில் சன் டிவி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் நேரம் மாற்றம் செய்யுங்கள், ஆனால் முடிக்க வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version