Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் ஆராய விசேட குழு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் ஆராய விசேட குழு

0

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் ஆலோசனை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

மேலும், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

மேற்படி, விசாரணைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சை நடத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் குறித்த குழுவால் தீர்மானம் மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version