Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

0

தென்னிலங்கையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து இன்னொருவர் காயமடைந்துள்ளார். 

காலி அருகே மித்தெனிய பிரதேசத்தில் நேற்றிரவு(18.02.2025) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

T-56 ரக துப்பாக்கியொன்றைப் பயன்படுத்தி குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன் ​போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்னுமொரு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version