Home இலங்கை குற்றம் ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது

ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது

0

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகப் புள்ளியான நந்துன் சிந்தக என்பவர், தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டின் செப்டம்பர் 10ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா, அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தார்.

எனினும், பொலிஸார் மிகுந்த சிரமத்துடன் அவரது முயற்சியை முறியடித்திருந்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அதற்கு உதவியாகச் செயற்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடி, நாட்டை விட்டும் வெளியேறியிருந்தார்.

நால்வர் கைது 

இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் சேர்த்து இன்னும் நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version