Home உலகம் பணயக்கைதிகள் உயிருக்கு உத்தரவாதமில்லை : இஸ்ரேலை எச்சரிக்கும் ஹமாஸ்

பணயக்கைதிகள் உயிருக்கு உத்தரவாதமில்லை : இஸ்ரேலை எச்சரிக்கும் ஹமாஸ்

0

இஸ்ரேல் (Israel) காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நீண்ட நேரம் தொடர்ந்தால், பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஹமாஸ் (Hamas) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், தனது பணயக்கைதிகளை உயிரோடு வைத்திருப்பதற்காக அனைத்தையும் செய்து வருவதாகவும், ஆனால் முறையற்ற குண்டுவீச்சு அவர்களின் உயிரை ஆபத்துக்கு உட்படுத்துகிறது என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.

கடந்த வாரம், நெரிசல் மிகுந்த காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தீவிர வான்வழித் தாக்குதல்களை துவங்கி, தரைவழி நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. 

ஹமாஸ் எச்சரிக்கை

இந்தச் சம்பவம், ஜனவரி மாதத்தில் ஹமாஸ் படைகளுடன் நெருங்கிய போர்நிறுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைதியை சிதைத்ததாக கருதப்படுகிறது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால், சிறார்கள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 830 பலஸ்தீன மக்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேல் பணயக்கைதிகள்

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பார்வை திரும்பியதன் குற்றச்சாட்டுகள் மற்றும் காசா மக்களை வெளியேற்ற, அப்பகுதியை கண்கவரும் நகரமாக மாற்றி, போருக்குப் பின்னர் அதை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறிய நிலையில் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ட்ரம்பின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ட்ரம்பின் கருத்துக்கு அரபு நாடுகளும் சில ஐரோப்பிய நாடுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே தாக்குதல்கள் தொடர்ந்தால் , இஸ்ரேல் பணயக்கைதிகள் உயிருக்கு உத்தரவாமில்லை என ஹமாஸ் , இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version