Home இலங்கை குற்றம் அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது

அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது

0

அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் சொகுசு மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்ததாக குறித்த நபர் மீது காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த சில நட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குறித்த நபர் தலைமறைவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பூங்காவின் முகாமையாளர் மற்றும் களஞ்சிய மேலாளர் முன்னதாகவே கைது செய்யப்பட்டு, ஜூலை 25 ஆம் தீகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களில் 8 சொகுசு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 முப்பருவ மோட்டார் வாகனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை அம்பாந்தோட்டையின் பறவைகள் பூங்கா வளாகத்தில் அமைந்திருந்த ஒரு களஞ்சியத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த மோட்டார் வாகனங்களின் மொத்த மதிப்பு 200 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் கடந்த காலத்திலும் பல்வேறு சட்டவிரோத வாகன இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததையும் விசாரணைகள் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னளர். 

NO COMMENTS

Exit mobile version