Home இலங்கை அரசியல் விரைவில் மீண்டு வருவோம் – ஹரின் பெர்னாண்டோ சூளுரை

விரைவில் மீண்டு வருவோம் – ஹரின் பெர்னாண்டோ சூளுரை

0

எமது எழுச்சிக்கான பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம்(19) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சிறு பின்னடைவை சந்தித்திருக்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தி

தற்போது எம்மைப் பார்த்து புன்னகைப்பவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

2020ஆம் ஆண்டும் இதே போன்றதொரு வெற்றியே கிடைத்தது. ஆனால் 2 ஆண்டுகளில் மீண்டும் எமக்கு பொறுப்புக்களை ஏற்க வேண்டியேற்பட்டது.

வெற்றி என்பது வாழ் நாள் முழுவதும் ஒருவருக்கு மாத்திரம் உரித்தானதல்ல.

தோல்வியடைபவர்கள் தான் மீண்டெழுவார்கள்.

எனவே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள வெற்றியை மதிக்கும் அதேவேளை, எமது எழுச்சிக்கான பணிகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்.

தேசிய பட்டியல் ஆசனங்கள்

நாடு ஏற்றுக் கொள்ளும் இருவருக்கு புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது போராட்டம் நாடாளுமன்றத்துக்குள் அல்ல. வெளியிலேயே காணப்படுகிறது.

எனவே தாம் நாடாளுமன்றத்துக்கு செல்வது தான் பொறுத்தமானதாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

1970 களில் ஜே.ஆர்.ஜயவர்தன வீதியில் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவே 1977இல் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றார்.

2020இல் பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கப் பெற்ற 69 இலட்சமே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. விரைவில் மீண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version