அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை இன்று(3) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“நீண்ட காலமாக, நமது நாட்டின் நிர்வாகம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது, இதன் காரணமாக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
மக்கள் நிராகரிப்பது அரசியலை அல்ல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தையே நிராகரிக்கின்றார்கள்.
வரலாற்று முக்கியத்துவம்
இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக, மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம்.
தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.
இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
எங்களிற்கு இந்த தேசத்தின் பிரஜைகள் விடுத்துள்ள சவாலை கரங்களில் எடுங்கள் பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுங்கள்,
நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை சிறந்த இடமாக மாற்றுவோம்” என்றார்.