Home இலங்கை அரசியல் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் சிறிலங்கா அரசுக்கு கடும் அழுத்தம்

ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் சிறிலங்கா அரசுக்கு கடும் அழுத்தம்

0

ஜூலை 9 ஆம் திகதியுடன் காலக்கெடு முடிவடையும் நிலையில், அமெரிக்காவுடன் வரி ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

சிறந்த ஒப்பந்தம்

அதில், வியட்நாம் இந்த வாரம் தனது 46% பரஸ்பர வரியை 20% ஆகக் குறைத்துள்ளதாக அறிவித்ததை விட, சிறிலங்கா அரசாங்கம் சிறந்த ஒப்பந்தத்தை பெற முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, இந்தியாவும் சில வரிச்சலுகைகளை சுழற்சி முறையில் குறைத்து, விரைவில் முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்யான வாக்குறுதிகள் 

நாடாளுமன்றத்தில் இதுபற்றிக் கேட்டபோது, அமைச்சர் அனில் ஜயந்த, “இலங்கை தான் ஆசியாவிலேயே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரே நாடாக உள்ளது” என்றும் “நேர்மறையான முடிவுகள் கிடைக்கும்” என்று கூறியதாக ஹர்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் “நாங்கள் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவோம், வளர்ச்சி கொண்டு வருவோம்” என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் கடைசியில் வெறும் சொற்களாகவே மாறிவிட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version