நாடாளுமன்ற நிதிக்குழுவின் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, நிதிக்குழுவின் பதவிக்கு ஹர்ஷத சில்வாவின் பெயர் நாளை (3) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கண்டி மாவட்ட உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் இணக்கம்
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நிதிக் குழுவின் தவிசாளராக நியமிக்க புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அனுராத ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஹர்ஷத சில்வா இதற்கு முன்னர் இரண்டு முறை நிதிக் குழுவின் தவிசாளர் பதவி வகித்துள்ளார்.