தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்த பொதுமக்கள் மீண்டுமொரு தடவை ஏமாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சண ராஜகருணா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றமொன்றை கொண்டுவரும் என்று நம்பியே பொதுமக்கள் வாக்களித்தார்கள்.
மீண்டும் ஏமாற்றப்பட்ட மக்கள்
ஆனால், எந்தவித அனுபவமும் அற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த காரணத்தினால் நாடு வழிதவறிப் போய்க் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், மீண்டுமொரு தடவை பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அதனை நினைக்கும் போது மனவருத்தமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.