Home இந்தியா திடீரென வீதியின் நடுவே தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

திடீரென வீதியின் நடுவே தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

0

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று(07) 5 பயணிகளுடன் சென்ற தனியார் உலங்கு வானூர்தி திடீரென வீதியின் நடுவே தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக உலங்கு வானூர்தியை விமானி திடீரென வீதியின் நடுவே தரையிறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைந்து வந்த மீட்புக்குழுவினர்

இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும், விமானிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தரையிறக்க முற்பட்டபோது, உலங்கு வானூர்தியின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த கார் சேதமானது.

 வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

NO COMMENTS

Exit mobile version