Home முக்கியச் செய்திகள் யாழில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்

யாழில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்

0

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (03.06.2025) அதிகாலை யாழ்ப்பாணம் (Jaffna) – பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது.

வேகக்கட்டுப்பட்டை இழந்து பாய்ந்தது

இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது.

வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version