Home முக்கியச் செய்திகள் மின்னல் வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

மின்னல் வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

0

தற்போதைய காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்கள், இரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

இதற்காக இரசாயனம் கலந்த பதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம், தற்காலிக தீர்வுகளை மட்டுமே பெற முடியும், மேலும் பிரச்சினை தீவிரமாகலாம்.

எனவே, சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் பட்டு போன்ற அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

பழங்காலத்தொட்டு செம்பருத்தியானது, முடி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் பயன்படுத்துவர்.

முடி வளர்ச்சி

அந்தவகையில், செம்பருத்தியை வைத்து எப்படி முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் என பார்க்கலாம்.

செம்பருத்திப் பூக்கள் மற்றும், செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய் என்பவற்றை அளவுக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

செம்பருத்தி பூ மற்றும் இலை கறிவேப்பிலையை விழுது போன்று அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அரைத்த விழுதை சேர்த்து நான்கைந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

எண்ணெய் ஆறிய பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பிறகு, அந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து வர சிறந்த பலன் கிடைக்கும்.

Source: https://ibctamil.com/article/hibiscus-homemade-haiir-oil-for-hair-growth-tamil-1721130559?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version