இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா(Hardik Pandya) பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ரி20, மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் ஜூலை 27ல் முதல் தொடங்குகிறது.
ரி 20 போட்டிகள் தொடர்ந்து மூன்று நாள்களில் (27,28,29) மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
ஹர்திக் பாண்டியா விலகல்
இதனை தொடர்ந்து ஓகஸ்ட் 2, 4, 7ம் திகதிகளில் ஒரு நாள் போட்டிகள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ரோகித் சர்மா ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய ரி20 அணிக்கான அணித்தலைவராகக செயல்படவுள்ளார்.
எனினும், ஹர்திக் பாண்டியா அதன்பின்னர் நடக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளியான காரணம்
மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் விலகுகிறார் என்று அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி, “ஹர்திக் பாண்டியா ரி20 போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்துவார்.
எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுகிறாரே தவிர, ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல், வேறு எந்த காரணமும் இல்லை. அவர் நல்ல உடல்தகுதியுடன் உள்ளார்.” என்றும் தெரிவித்துள்ளார்.