Home இலங்கை ஐ.நாவின் செம்மணி மிசன்! தமிழ் டயஸ்போறாவின் ஒட்சிசன்!

ஐ.நாவின் செம்மணி மிசன்! தமிழ் டயஸ்போறாவின் ஒட்சிசன்!

0

செம்மணியில் புதைகுழிகள் உள்ள பகுதிக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேரடியாக சென்றவிடயம் தமிழ் மக்களை பொறுத்தவரை தொழினுட்பரீதியில் முக்கியமானது.

இதுவரை, பொதுவாக 2009 ஐ மையப்படுத்தியே மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பேசப்படும் நிலையில் அந்தக்காலப்பகுதியை விட 90 கள் மற்றும் 80 களின் காலப்பகுதி கொடுமைகள் மீது மனித உரிமைபேரவையை குவியப்படுத்துவது புலம்பெயர் தமிழ் சமுகத்தின் பங்களிப்பின் விளைவாக வந்த ஒரு நகர்வாகும்.

இந்த நிலையில், இலங்கையில் ஜேவிபி உறுப்பினர்கள் மீதான மனித உரிமை மீறலகளுக்கு உள்ளுர் பொறிமுறைகள் சாத்தியப்படும் என்றாலும் தமிழர்களின் விடயத்தில் இலங்கையின் உள்நாட்டு வழிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டதான விடயத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் இந்த வார பயணத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் ஜெனிவாவில் உள்ள தனது பணியகம் உறுதியாக உள்ளதாகவும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றம் அவை தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் ஏற்கனவே பிரத்தியேகமான திட்டமிடல்கள் ஜெனிவாவில் நகர்த்தப்பட்டதாக விடயத்தையும் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு.  

https://www.youtube.com/embed/RvuvluszIGw

NO COMMENTS

Exit mobile version