இலங்கையில் முதலீடு ஒன்றை மேற்கொள்ள ஆர்வத்துடன் வருகை தந்திருந்த ஜப்பானிய முதலீட்டாளர் குழுவொன்று, உயர்மட்ட அதிகாரியொருவரின் அலட்சியம் காரணமாக திரும்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வர்த்தகர் சஜீவ ராசபுத்ர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக சிங்கள வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் உயர் அதிகாரி
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் வீதிப் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்துடன் ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அவர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வர்த்தகர் சஜீவ ராசபுத்ர ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த ஜப்பானிய முதலீட்டாளர்கள் இது தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரியொருவரையும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
போயா விடுமுறை தினமொன்றில்
அதன்பின்னர் குறித்த அதிகாரி தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குப் பதில் ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளார்.
அத்துடன் போயா விடுமுறை தினமொன்றில் பிறிதொரு இடத்தில் கலந்துரையாட வருமாறு ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் காரணமாக அதிருப்தியுற்ற ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக வர்த்தகர் சஜீவ ராசபுத்ர தெரிவித்துள்ளார்.
