Home இலங்கை சமூகம் அபிவிருத்தியடையும் ஹிங்குரக்கொட விமான நிலையம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

அபிவிருத்தியடையும் ஹிங்குரக்கொட விமான நிலையம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

0

ஹிங்குரக்கொட விமான நிலையத்தை (Hingurakgoda Airport) அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நியமங்களுக்கு அமைவாக ஹிகுராக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம்

இதன்படி, விமான நிலையம் மற்றும் அது தொடர்பான திட்டங்களை தயாரிப்பதற்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம், ஹிங்குரக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிபரும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/hingurakgoda-airport-development-cabinet-approval-1719300864

NO COMMENTS

Exit mobile version