Home முக்கியச் செய்திகள் 2009 இறுதி யுத்தத்தின் முக்கிய காணொளி : விடுக்கப்பட்டுள்ள பகீரங்க சவால்

2009 இறுதி யுத்தத்தின் முக்கிய காணொளி : விடுக்கப்பட்டுள்ள பகீரங்க சவால்

0

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய காணொளிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) வழங்க தயாராக இருப்பதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் (Nehru Gunaratnam) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  அநுர அரசாங்கம் தொடர்பில் தமிழ் புலம்பெயர் சமூகத்தில் இருந்து சில எதிர்வாத கருத்துக்கள் வெளிப்பட்டாலும், ஜனநாயக முறையில் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஆதரவை அந்த மக்கள் வெளிப்படுத்த தயாராக உள்ளனர்.

இவ்வாறான காணொளிகளின் மீது சர்வதேசத்தின் அழுத்தங்கள் காணப்படுகின்ற நிலையில் அதில் பெரும்பாலான காணொளிகளை வெளிப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் (Canada) தமிழ் அரசியல் களம், யுத்தகாலம், சர்வதேசத்தின் இலங்கை மீதான ஈடுபாடு மற்றும் எதிர்கால அரசியல் களம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/ECwSaqiKLXk?start=2162

NO COMMENTS

Exit mobile version