Home இலங்கை அரசியல் அரிசி தட்டுப்பாடு,விலையேற்றத்திற்கு பின்னணி என்ன ..! அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

அரிசி தட்டுப்பாடு,விலையேற்றத்திற்கு பின்னணி என்ன ..! அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

0

தற்போதைய அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு நிதி அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பு என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான மகிந்த அமரவீர(mahinda amaraweera) குற்றம் சுமத்தியுள்ளார்.

 நெல் கொள்வனவு செய்வதற்கு உரிய நேரத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணம் வழங்க அதிகாரிகள் தவறியமையே இந்த தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு வழிவகுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் வழங்க மறுத்த ரணிலின் பொருளாதார ஆலோசகர்

“விவசாய அமைச்சர் என்ற வகையில், நெல் கொள்வனவு செய்வதற்கு சந்தைப்படுத்தல் சபைக்கு பணம் வழங்குமாறு பல தடவைகள் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், நிதியமைச்சின் உயர் அதிகாரிகளைப் போலவே, அப்போதைய ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகரும் சந்தைப்படுத்தல் சபைக்கு பணத்தை வழங்க மறுத்துவிட்டார்.

இதன் காரணமாக, அரிசி மாஃபியா, விவசாயியையும், நுகர்வோரையும் இஷ்டத்துக்குச் சுரண்டியது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் வாங்க நிதி அமைச்சக அதிகாரிகள் பணம் கொடுத்தனர். ஆனால் அந்தத் திட்டத்தால் விவசாயிக்கோ நுகர்வோருக்கோ எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

காலம் பிந்திய செயற்பாடு

இதனை நான் பல தடவைகள் சுட்டிக்காட்டி இறுதியாக எனக்கு 500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அனைத்து அரிசியும் மில் உரிமையாளர்களிடம் இருந்தது

அருகில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது என கூச்சலிட்ட சில அரசியல் கட்சிகளின் விவசாய பிரதிநிதிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒரு நெல் மணியை கூட வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version