Home இலங்கை சமூகம் சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டம் வெளிப்படுத்திய ஆபத்தான சமிக்ஞைகள்

சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டம் வெளிப்படுத்திய ஆபத்தான சமிக்ஞைகள்

0

யாழ். மாவட்டத்தின் தொன்மை மிகு வைத்தியசாலையான சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக திரண்ட மக்கள் தமது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளும் எதிர்பார்ப்புடன் கூடியவர்கள் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.

இந்த போராட்டமானது இலங்கை சுகாதாரத்துறைக்கு பெரும் ஆபத்தாக மாற்றம் பெறக்கூடிய வகையில் அமையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேற்கண்ட விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பில் தற்போது வரை தொடரும் சர்ச்சைகள் வடக்கு மாகாண வைத்திய நிலைமைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்புகிறது.

இலங்கையின் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பில் அண்மைய காலங்களில் குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படுவதன் தொடர்ச்சியில் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரமும் அதில் இணைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை மீதான சர்ச்சைகளுக்கு அரசாங்கமானது எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

இலங்கையின் மருத்துவ துறைக்கு சர்வதேசத்தின் ஆதரவு வழங்கப்படுகின்ற போதிலும் இவ்வாறான குறைபாடுகளுக்கு காரணம் என்ன? என்பதான விடயங்களை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு…

NO COMMENTS

Exit mobile version