Home இலங்கை அரசியல் புதிய எம்.பிக்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து வெளியான தகவல்

புதிய எம்.பிக்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து வெளியான தகவல்

0

புதிதாக தெரிவு செய்யப்பட்ட 35க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீடுகளில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் (Department of Parliamentary Communications) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய வீடுகள் வழங்கப்படும் எனவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி

கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர்களுக்குள் வீடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீடுகள் வழங்கப்படும் எனவும் நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் 110 வீடுகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் 

இதேவேளை, 09வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மாதிவெல உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியின் வீடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை (நவம்பர் -14) மாத்திரம் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வருட பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கக்கூடிய தகுதியுடையவர்கள் என நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version