இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்மாணப் பணிகள்
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ரூபா 1305 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
