யேமனில் உள்ள ஹவுத்திகள் இஸ்ரேலின் மற்ற எதிரிகளுக்கு ஏற்பட்ட அதே கதியையே சந்திக்க நேரிடும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமின் மீட்சிக்காக கொண்டாடப்படும் ஹனுக்கா விழாவின் போது, நெதன்யாகு இதனை தெரிவித்துள்ளார்.
ஹவுதிக்கான பாடம்
இதேவேளை, “ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஆட்சி மற்றும் பிறர் கற்றுக்கொண்டதை ஹவுதிகளும் கற்றுக்கொள்வார்கள்.
மேலும் நேரம் எடுத்தாலும், இந்த பாடம் மத்திய கிழக்கு முழுவதும் கற்றுக் கொள்ளப்படும் என்றும் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.
ஹவுதி தலைவர்களின் தலைகள்
அண்மைய நாட்களாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பு இஸ்ரேல் மீது பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்து வருகின்ற நிலையில் இஸ்ரேல் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
அத்துடன், ஹவுதி அமைப்பை கடுமையாக தாக்குவோம் என்றும் ஹவுதிகளின்மூலோபாய உள்கட்டமைப்பைத் தாக்கி அதன் தலைவர்களின் தலைகள் துண்டிக்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.