Home உலகம் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்! வைரலாகும் காணொளி

விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்! வைரலாகும் காணொளி

0

ஆறு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ்(Sunita williams) தனது குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காணொளியை நாசா(NASA) வெளியிட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

எனினும், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாடிய காணொளி

இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் தனது குழுவுடன் இணைந்து விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள காணொளி இணைய தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version